அறந்தாங்கி நகர தமுமுக நிர்வாகிகள் தேர்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update: 2025-12-29 08:43 GMT
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அறந்தாங்கி நகரம் ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ப.சேக் தாவூதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் M. ஜகுபர் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் நூர் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறந்தாங்கி நகரத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனை செய்யப்பட்டு அறந்தாங்கி நகர நிர்வாகம் கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுக்கப்பட்டது நகர தலைவராக M. முகம்மது ஜக்கரியா ,தமுமுக நகர செயலாளராக N.ஜகுபர் அலி ,மமக நகர செயலாளராக A. ரியாஸ் முகமது , நகர பொருளாளராக A.அப்துல் கரீம்,துணைத் தலைவராக P. முகமது அன்சாரி அவர்களும்,தமுமுக துணைச் செயலாளர்களாக S.அன்வர் அலி, A. புரோஸ்கான்,மமக துணைச் செயலாளர்களாக K. சாதிக் பாட்ஷா,H. முகமது பகத் ,A. மீரா மைதீன்,நகர மருத்துவ அணி செயலாளராக A. அசார்தீன்,நகர இஸ்லாமிய பிரச்சார (IPP)பேரவை செயலாளராக M. சாகுல் ஹமீது அவர்களும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் செய்யது அப்பாஸ், மௌலவி பக்ருதீன் அலி அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News