துரையரசபுரத்தில் அங்காடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் துரையரசபுரத்தில் புதிய அங்காடி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.;
ஆமாஞ்சி ஊராட்சி துரையரசபுரத்தில் புதிய அங்காடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆமாஞ்சி ஊராட்சிக்குட்பட்ட துரையரசபுரம் கிராமத்தில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10.50 லட்சம் மதிப்பீட்டில் அங்காடி கட்டிடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆமாஞ்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் முருகையா ஒப்பந்தகார் சக்திவேல் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.