மணப்பாறை அருகே தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மணப்பாறை அருகே தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2025-12-29 09:21 GMT
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், வையம்பட்டி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் கே.டி.ஆர். குமார் தலைமையில் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்த்தின் திரு உருவ படத்திற்கு கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து கட்சிக்கொடியை ஒன்றிய செயலாளர் குமார் ஏற்றிவைத்தார். பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வரிசையாக வந்து அன்னதானத்தை பெற்றுச் சென்றனர். இதில் அவைத்தலைவர் சுவீட்பாலு, பொதுக்குழு உறுப்பினர் ஜான் பீட்டர், ஒன்றிய துணைச்செயலாளர்கள் அன்பரசன், மணி, மாவட்ட பிரதிநிதிகள் வேல்முருகன், முருகேசன், இளைஞரணி செயலாளர் ஆர்.கே.டி.சதீஷ், கேப்டன் மன்ற செயலாளர் வேலுச்சாமி, ஊராட்சி செயலாளர் முருகானந்தம், செக்கனம் ஊராட்சி செயலாளர் தோமாஸ், அயன்ரெட்டியபட்டி ஊராட்சி செயலாளர் சக்திவேல், மீனாட்சிபுரம் கிளை செயலாளர் சக்திவேல், கருங்குளம் பொறுப்பாளர்கள் தாமஸ் பிரபாகரன், அற்புததாஸ், வைரம்பட்டி கிளை பொருளாளர் சக்திவேல், கிளை நிர்வாகி மகேஷ், லெட்சம்பட்டி கிளை அய்யாக்கண்ணு, ராஜேஷ், முருகேஷ், ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துக் கொண்டனர்.

Similar News