கரூர்-உரிய அனுமதி பெறாமல் தனியார் சிமெண்ட் நிறுவனம் கட்டிய கட்டிடத்தை இடிக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் புகார் மனு.
கரூர்-உரிய அனுமதி பெறாமல் தனியார் சிமெண்ட் நிறுவனம் கட்டிய கட்டிடத்தை இடிக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் புகார் மனு.;
கரூர்-உரிய அனுமதி பெறாமல் தனியார் சிமெண்ட் நிறுவனம் கட்டிய கட்டிடத்தை இடிக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் புகார் மனு. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா தென்னிலை மேல்பாகம் பகுதியில் உரிய அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக தனியார் சிமெண்ட் நிறுவனம் கட்டிடம் கட்டி வருவதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்து, ஆவண செய்வதாக கூறி இதுவரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளதால் விவசாயம் பொய்த்து தற்போது கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவ்வப்போது பெய்யும் மழையில் வளரும் கால்நடை தீவனங்களை வைத்து ஜீவனாம்சம் செய்து வருகிறோம். ஏற்கனவே எங்கள் பகுதியில் பல்வேறு கல்குவாரிகள் செயல்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வசிக்க இயலாத பகுதியாக மாறி வருகிறது. இன்நிலையில் புதிதாக தென்னிலை மேல்பாகம் பகுதியில் புதிய சிமெண்ட் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டிடங்களை கட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் ஆவண செய்வதாக கூறி எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது தனியார் சிமெண்ட் நிறுவனத்தின் கட்டிடப் பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு சிமெண்ட் நிறுவனம் செயல்பட்டால் அங்கிருந்து எழும் சிமெண்ட் படிவங்கள் கால்நடை தீவனங்கள் மீது படிந்தால் கால்நடைகளுக்கும் தீவனம் இல்லாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே அனுமதி இன்றி கட்டிய அந்த கட்டிடத்தை ஆய்வு செய்து உடனடியாக இடிக்க வேண்டும். தவறினால் வரும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.