கள்ளக்குறிச்சி: கட்டிமுடித்த கழிவறை திறக்காம இருக்கும் ஊராட்சி...

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் கட்டி முடித்தும் கழிவறை திறக்காமல் இருக்கும் அவல நிலை!;

Update: 2025-12-29 11:35 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம்,மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் கட்டி முடித்த கழிவறை திறக்காமல் உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி சார்பில் 15வது நிதி குழு மானியம் மூலம் கடந்த ஆண்டு 2.15 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிவறை கட்டப்பட்டது. கட்டி முடித்து பல மாதங்கள் கடந்தும், கழிவறை திறக்கப்படாமல் உள்ளது. கழிவறை அருகே 3 லட்சம் மதிப்பில் தண்ணீர் தொட்டியும் கட்டி திறக்கப்படாமல் உள்ளது. தண்ணீர் தொட்டி கட்சி போஸ்டர்கள் ஒட்டும் இடமாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மாறி வருகிறது. கழிவறை கட்டி முடித்து சிறப்பு விருந்தினர் வருகைக்காக பல மாதங்களாக பூட்டி வைத்துள்ளனர். கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் பாழாக்கி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி கழிவறை கட்டடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News