சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயிலின் சுற்றுச்சுவர் இடிப்பு - போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர்

போராட்டம்;

Update: 2025-12-29 13:11 GMT
தேனி மாவட்டம் தேனி அருகே தப்பகுண்டு பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்தக் கோயிலில் தப்புகுண்டு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி மேற்கொள்வதாக கூறி கோயிலின் சுற்று சுவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு இடித்துள்ளனர் மேலும் மின்கம்பங்கள் அமைப்பதற்கு கோயில் வளாகத்தில் உள்ள நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அரசு மரம் இடையூறாக இருப்பதாக கூறி மின்சாரத்துறையினர் மரத்தை அகற்ற முயற்சி செய்தனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அந்தப் பகுதியில் சாலை விரிவாக்க பணி, மற்றும் மரம் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது இந்த நிலையில் கோயில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது குறித்து தேனி மாவட்ட இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோயில் மற்றும் அரச மரத்தை அகற்றுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர் இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தொண்டரணி துணைத் தலைவர் குரு ஐயப்பன் கூறுகையில் சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் நெடுஞ்சாலை துறையினர் எந்த அறிவிப்பும் இன்றி கோயில் சுற்றுச்சுவரை இடித்துள்ளனர் பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கோயில் மற்றும் அரச மரத்தை அகற்றும் பணியை நிறுத்தி மக்கள் வழிபட வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் கோயில் மற்றும் அரச மரத்தை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து இயக்க தலைவர்கள் மற்றும் அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும் என்று தெரிவித்தார்

Similar News