பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
பல வருடங்களாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருக்கும் பொது மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மூலக்குறிச்சி ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில் சுமார் 150 க்கு மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களை சார்ந்த பல்வேறு சமூக பொதுமக்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 30 லிருந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.ராசிபுரம் மட்டும் முள் குறிச்சி குரு வட்டம் மூலக்குறிச்சி கிராமத்தில் சர்வே எண். 111/2 லிருந்து 122/4. வரையிலான சர்வே எண்களில் அரசு புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர் மேற்படி நிலத்தில் குடியிருந்து வரக்கூடிய பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட முறை பல்வேறு வகையில் வகைகளில் கோரிக்கை மனு அளித்தனர் மூலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர் நாமகிரிப்பேட்டை ஊராட்சி பெருந்தலைவர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர்கள் ராசிபுரம் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு முதலமைச்சர் என உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் மற்றும் அரசியல் அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் இலவச வீட்டு மனை பட்டம் வழங்காததை கண்டித்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.