ஆட்சியரிடம் புகார் மனுவை கொடுத்த கல்லுரி மாணவி
நாமக்கல் வையப்பமலையில் உள்ள கவிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் கல்லூரி மாற்றுச் சான்றிதழுக்கு திரும்பக் கேட்டதற்கு அதிக தொகை கேட்பதாக கல்லூரி மாணவி மாவட்ட ஆட்சியிடம் புகார் மனு கொடுத்தார்.;
நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் உள்ள கவிதா கலை மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் 2024 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டியைச் சேர்ந்த சரவணன் மகள் கயல்விழி பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்துள்ளார் பின்னர் மாணவி கயல்விழியின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பொருளாதார ரீதியாக குடும்பம் பாதிக்கப்பட்டது எனவே மாணவியால் கல்வி கட்டணம் செலுத்தி கல்வியை தொடர முடியவில்லை தற்போது தனது அசல் கல்விச் சான்றிதழை திரும்ப வழங்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவி கேட்டபோது நிலுவைத்தொகை 13,500 செலுத்தினால் மட்டுமே வழங்க முடியும் என்று சொல்லிவிட்டனர் கல்வி கட்டின நிலுவைத் தொகை கட்ட முடியாத மாணவி கடந்த 15 /12 /2025 ஆம் தேதி அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தார் கல்வி நிர்வாகம் குழு 13500 க்கு பதிலாக 16,500 கட்ட வேண்டும் என வலியுறுத்துள்ளனர் எனவே மாவட்ட ஆட்சியர் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கவிதா கலை மற்றும் கலை அறிவியல் கல்லூரி மீது குருவே உரிய நடவடிக்கை எடுத்து சான்றிதழை பெற்றுக் கொடுக்குமாறு பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட ஆட்சியிடம் மீண்டும் இன்று மனு கொடுத்தார்