நவோதயா பள்ளி மாணவி வில் வித்தைப் போட்டியில் மாநில அளவில் சாதனை வெற்றி.

நவோதயாஅகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான இரண்டாவது உள்விளையாட்டு வில்வித்தைப் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.;

Update: 2025-12-29 14:02 GMT

 அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.மாநில அளவிலான இரண்டாவது உள்விளையாட்டு வில்வித்தைப் போட்டியைதமிழ்நாடு வில்வித்தை பயிற்சி அசோசியேசன் கடந்த 27  28ஆம் தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் கலை அறிவில் கல்லூரியில் நடத்தியது. ஆதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ  மணவிகள் கலந்துகொண்டார்கள் அதில் நமது நவோதயா அகாடமிசீனியர் செகண்டரி பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி எஸ். சம்ரிதா   கலந்துகொண்டு 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். பள்ளியின் பொருளாளர்  கா. தேனருவி   இன்றுமாணவிக்கு சான்றிதழ் மற்றும் வெண்கல மெடல் அணிவித்து வாழ்த்துகளைக கூறினார். பள்ளிமுதல்வர் ஆசிரியர்கள்ரூபவ் சகமாணவரூபவ் மாணவியர் பணியாளர்கள் அனைவரும் வாழ்த்துகளையும்  பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Similar News