வரலாற்று சின்னங்கள் சீரமைக்க காவிரி படுகை அமைப்பினர் கோரிக்கை
குமாரபாளையம் அருகே சங்ககிரி மலைக்கோட்டைக்கு செல்லும் வழி மற்றும் வரலாற்று சின்னங்கள் சீரமைக்க காவிரி படுகை அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
குமாரபாளையம் அருகே சங்ககிரி மலைக்கோட்டைக்கு செல்லும் வழி மற்றும் வரலாற்று சின்னங்கள் சீரமைக்க காவிரி படுகை அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரிப்படுகை அமைப்பின் சார்பில் சங்ககிரி மலைக்கோட்டை வரலாற்றுப் பயணம் நடந்தது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இங்கு 10 நுழைவு வாயில்கள், கோட்டை சுவர்கள், கீழ் பெருமாள் கோவில், நடுமலை மசூதி, சுரங்கபாதை, ஆயுத கிடங்கு, குதிரை லாயங்கள், தானிய கிடங்கு, தொங்க விட்டான் பாறை, தோலுரித்தான் பாறை, ஆள் உருட்டான்பாறை, மலை மேல் உள்ள பெருமாள் கோவில், ஆள் இறக்கும் குழி, தீரன் சின்னமலை தூக்கில் இடப்பட்ட இடம் உள்ளிட்ட பல இடங்கள் இங்கு உள்ளது. இந்த இடங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. தமிழக சுற்றுலாத்துறையினர் இந்த இடங்களை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கீழே இருந்து மேலே செல்ல, படிகள் இல்லாத நிலை உள்ளது. இதற்கு போதுமான படிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி படுகை அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.