தமிழக துணை முதல்வர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற டி.ஆர்.சிவசங்கர்

துணை முதல்வர் உதயநிதியை, பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் சந்தித்து, வள்ளுவர் கோட்ட சிலையை வழங்கி வாழ்த்து பெற்றார்.;

Update: 2025-12-29 14:22 GMT
தமிழக துணை முதல்வர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற டி.ஆர்.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினராகவும் இருப்பவர் டி.ஆர்.சிவசங்கர். இவருக்கு இன்று (30ம் தேதி) 35 வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி இவர், தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை சென்னையில் பசுமைவழிச் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உதயநிதிக்கு, வள்ளுவர் கோட்ட சிலையை டி.ஆர்.சிவசங்கர் வழங்கினார். கட்சி பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என அப்போது சிவசங்கரை, உதயநிதி வாழ்த்தினார். சென்னையில் துணை முதல்வர் உதயநிதியை, பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் சந்தித்து, வள்ளுவர் கோட்ட சிலையை வழங்கி வாழ்த்து பெற்றார்.

Similar News