தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா ராசிபுரம் ஒன்றிய கழகத்தின் சார்பில் நினைவஞ்சலி: அன்னதானம்....
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா ராசிபுரம் ஒன்றிய கழகத்தின் சார்பில் நினைவஞ்சலி..;
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் புரட்சி கலைஞர் கருப்பு எம்ஜிஆர் என்று அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா நினைவஞ்சலி அனைத்து பகுதிகளிலும் அனுசரிக்க தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி அண்ணியார் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்டம் மாவட்ட செயலாளர் டி.எஸ். விஜய சரவணன் ஆலோசனை பெயரில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் நாமக்கல் வடக்கு மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராசிபுரம் மேற்கு ஒன்றியத்தில் மாவட்டச் செயலாளர் அண்ணன் டி எஸ் விஜய் சரவணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி கேப்டனின் இரண்டாவது குருபூஜை விழா சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சேகர், மாவட்ட கழக துணைச்செயலாளர்கள் சக்திவேல் மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஆண்டகளூர் கேட் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் ராசிபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், ராசிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர், ராசிபுரம் நகர கழகப் பொருளாளர் நடராஜன், புதுப்பட்டி பேரூர் கழகச் செயலாளர் மூர்த்தி, மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் டி. என்.ஆனந்த்,கார்த்திகேயன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கோபால்,குப்புசாமி, கீர்த்தனா, சக்திவேல்,எம்ஜிஆர்,சரண், V.தென்னரசு, செல்வராசுபுதுப்பட்டி சிவகுமார், கார்த்தி,சுப்பிரமணி,முருகன், சாமி கண்ணு,சக்திவேல், கௌதம், தேவராஜ், நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.