விழப்பள்ளம்: ஐயப்பனுக்கு திருக்குட நன்னீராட்டு விழா
விழப்பள்ளம் ஐயப்பனுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள ஏழை மாரியம்மன் திருக்கோயில் என வழங்கும் செங்கழணி மாரியம்மன் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஐம்பொன் திருவுருவ திருமேனிக்கு திருக்குட நன்னீராட்டு மற்றும் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.