ராசிபுரம் அருகே செயின் பறிப்பு திருடன் கைது..,

ராசிபுரம் அருகே செயின் பறிப்பு திருடன் கைது.., a;

Update: 2025-12-29 14:49 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாறைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து மனைவி செல்லம்மாள், 65. இவர் கடந்த 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் வாசல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த மர்ம நபர் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை கொண்டு வந்து கொடுத்த செல்லம்மாள் அயர்ந்த நேரத்தில் அவர் கழுத்தில் அ ** ணிந்திருந்த, 2 பவுன் தங்கச் சங்கலியை பறித்துக் கொண்டு சென்றார். இதுகுறித்து, ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர், இந்நிலையில், ஆயில்பட்டி போலீசார் மெட்டாலா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்கு இடமான வகையில் இருசக்கரத்தில் வாகனத்தில் வந்த நபரை விசாரித்தபோது அவர் முன்னுக்கு முன் முரணாக தகவலை தெரிவித்தார். மேலும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போது சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த தன்ராஜ் மகன் கண்ணன், 35. என்பதும் கடந்த வெள்ளிக்கிழமை நாமகிரிப்பேட்டை செல்லம்மாள் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கலியை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து கண்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து இரண்டு பவுன் செயின் மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Similar News