குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு...
குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளி யில் 1981 முதல் 1988 வரை பயின்ற "முன்னாள் மாணவர்கள்கள் சந்திப்பு" மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களை கவுரவிக்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி கலையரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் திரு. N S செல்வராஜூ மற்றும் திரு S.கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் ஏராளமான முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த சந்திப்பு நடைபெற்றதால் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் மிகவும் ஆர்வமாக இந்த விழாவில் கலந்து கொண்டனர். மேலும் பள்ளி நினைவுகளை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் செல்பி எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தனர். விழாவில் பள்ளி நிர்வாகிகள் சார்பில் பொருளாளர் திரு. கோபால் அவர்கள் பள்ளி சமீபத்தில் நிகழ்த்திய சாதனைகளை விளக்கிப் பேசினார். மேலும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விழாவின் நிறைவாக முன்னாள் மாணவர் திரு. N.S. செல்வராஜூ அவர்கள் நன்றி கூறினார்.