கொமதேக சார்பில் நாமக்கல்லில் கோவை செழியன் பிறந்தநாள் விழா!-மாதேஸ்வரன் எம்பி மலர்தூவி மரியாதை
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியனின் 95வது பிறந்தநாள் விழாவில் மாதேஸ்வரன் எம்பி பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.;
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனருமான கோவை செழியனின் 95வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல்- மோகனூர் சாலை அண்ணாசிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் மலா் தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மணி,தலைமை நிலையச் செயலாளர் செல்வராஜ்,நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளரும், திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன்,மாவட்ட பொருளாளர் சசிகுமார், வர்த்தக அணி செயலாளர் குரு.இளங்கோ, துணை செயலாளர் ரமேஷ்குமார், நாமக்கல் மாநகராட்சி உறுப்பினர் மாயாஸ் பழனிச்சாமி,அவைத் தலைவர் பழனிமலை, மகளிர் அணி சத்யா, பிரேமலதா, சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.