சின்னையம்பாளையம் விஏஓ அலுவலகம் கட்டிடம் பழுது
புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை;
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே சின்னையம்பாளையம் கிராமத்தில் விஏஓ அலுவலக கட்டிடம் பழுதான நிலையில் உள்ளது. சிமெண்ட் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான சூழல் ஏற்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் அலுவலர்களும், பொதுமக்களும் அச்சமடைந்து வருகின்றனர். கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.