மாவட்டம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மூன்று சக்கர சைக்கிள் வேண்டி மனு கொடுத்த
பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாது;
பெரம்பலூர் மாவட்டம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மூன்று சக்கர சைக்கிள் வேண்டி மனு கொடுத்த மாற்றுத்திறனாளி முதியவர் - 15 நிமிடங்களில் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் **** பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (29.12.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியுடைய அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெறுவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டு மனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 437 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். இன்றைய கூட்டத்தில் மூன்று சக்கர சைக்கிள் வேண்டி பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் வசித்து வரும் திரு.பஷீர் அஹமத் (70 வயது) என்ற மாற்றுத்திறனாளி முதியவர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுத்தார். அவரின் நிலை உணர்ந்து உடனடியாக அவரின் கோரிக்கையினை நிறைவேற்ற மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதனையடுத்து 15 நிமிடங்களில் அவருக்கு மூன்று சக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தனது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டதை சற்றும் எதிர்பார்க்காத மாற்றுத்திறனாளி முதிவர் மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தார். உடனடி நடவடிக்கை எடுத்த மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.குணசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திருமதி சிவக்கொழுந்து, பொது மேலாளர் (தாட்கோ) கவியரசு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.