கரூரில் பிரசித்தி பெற்ற நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அபய பிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு. பக்தர்கள் பரவச தரிசனம்.
கரூரில் பிரசித்தி பெற்ற நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அபய பிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு. பக்தர்கள் பரவச தரிசனம்.;
கரூரில் பிரசித்தி பெற்ற நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அபய பிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு. பக்தர்கள் பரவச தரிசனம். கரூர் மாநகரில் அமரவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அபய பிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து இராப் பத்து நிகழ்ச்சி கடந்த 20 -ம் தேதி துவங்கி வரும் 9 - ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நாள்தோறும் சுவாமி அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.30 மணியளவில் திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக ரெங்கநாத சுவாமி எழுந்தருளிய சுவாமிக்கு மகா தீபாரணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவிலை வலம் வந்து கோவில் முன்புறமுள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிக பக்தர்கள் ஆலயம் வந்து தரிசனம் செய்வதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.