தமிழ்நாடு அனைத்து பதிவு பெற்ற மருந்தாளுனர்கள் நல சங்க மாநில பொதுக் குழு கூட்டம்

ஈரோட்டில் தமிழ்நாடு அனைத்து பதிவு பெற்ற மருந்தாளுனர்கள் நல சங்க மாநில பொதுக் குழு கூட்டம் மாநில தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-12-30 07:03 GMT
ஈரோட்டில் தமிழ்நாடு அனைத்து பதிவு பெற்ற மருந்தாளுனர்கள் நல சங்க மாநில பொதுக் குழு கூட்டம் மாநில தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு சம்பத் நகர் அருகே உள்ள தனியார் மஹாலில் தமிழ்நாடு அனைத்து பதிவுபெற்ற மருந்தாளுனர்கள் நல சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் கார்த்திக் தலைமையில் நடை பெற்றது.இதில் கூட்டத்திற்கு துணை தலைவர் பேராசிரியர் சி.ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மருந்தாளுனர் நலன் சார்ந்த கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மாநகராட்சி, நகராட்சிகளில் மருந்தாளுனர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் 2.ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் 3.மருந்தகத்தில் மருந்தாளுநர் நேரடிப் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் 4.அரசு மருத்துவ கல்லூரிகளில் இளநிலைமருந்தியல் பட்டப்படிப்பில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும் என்கிற தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை ம் வேற்றப்பட்டன. மேலும் சங்கத்தின் தலைவர் கார்த்திக் கூறியதாவது கடந்த 16 ஆண்டுகளாக பார்மஸி கவுன்சில் தேர்தல் நடைபெறாமல் இருந்தது அதை இந்த ஆண்டு பெரும் முயற்சி எடுத்து நடத்தி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இந்த ஆண்டில் பொள்ளாச்சி தர்மபுரி, திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு முகாம்கள் பொது மக்களுக்கு நடத்தப்பட்டது. மேலும் சங்கத்தின் உறுப்பினர் சரவணன் மறைவிற்கு அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவி ரூ50,000 வழங்கப்பட்டது போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் நடை பெற்று உள்ளது என கூறினார். இந்நிகழ்ச் சியில் செயலாளர் மாநிலச் கிருஷ்ணகுமார், மாநில துணை செயலா ளர் சந்தோஷ் குமார், மாநில துணை பொருளாளர் காமராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் தண்டாயுதபாணி, தென் மண்டல பொறுப்பாளர் பாலமணிகண்டன் முன்னாள் மாநில செயலாளர் ஜெப சீலன், கோவை மண்டல பொறுப்பாளர் பிரசாந்த் கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச் சியின் இறுதியில் மாநில பொருளாளர் ராஜகணபதி நன்றி கூறினார்.

Similar News