அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் கண்காணிப்பு அலுவரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருமான எம்.லக்ஷ்மி, தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்;
பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் கண்காணிப்பு அலுவரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருமான எம்.லக்ஷ்மி, தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக, பெரம்பலூர் மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருமான எம்.லக்ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார். அதனடிப்படையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படிபெரம்பலூர் மாவட்டத்தில் 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி மற்றும் 148 குன்னம் சட்டமன்ற தொகுதிகளில், 01.01.2026 நாளினை தகுதி நாளாகக் கொண்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 சிறப்பு முகாம்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றது, வரைவு வாக்காளர் பட்டியலின் படி நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்த கருத்துகளையும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகளிடம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கேட்டறிந்தார். மேலும் பெரம்பலூர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், நீக்கம் செய்தல் ஆகியவற்றிற்கான ஏற்புரை மற்றும் மறுப்புரை பெறும் கால கட்டத்தின் பணிள் குறித்தும், சிறப்பு முகாம்கள் தொடர்பாகவும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர்களிடமும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் உதவி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர், க.கண்ணன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் அனிதா,சக்திவேல், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) சொர்ணராஜ், தனி வட்டாட்சியர் (தேர்தல்) அருளானந்தம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியன்,சின்னதுரை, முத்துக்குமார், துரைராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.