மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை திட்ட பெயரை மாற்றியதையும், மத்திய அரசு நிதியை வெகுவாக குறைத்ததையும் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதையும், மத்திய அரசு நிதியை வெகுவாக குறைத்ததையும் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்.;
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதையும், மத்திய அரசு நிதியை வெகுவாக குறைத்ததையும் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அண்மையில் மத்திய அரசு கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதையும், இந்த திட்டத்திற்காக மத்திய அரசின் நிதியை வெகுவாக குறைத்த மத்திய அரசை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் வினோத், மாவட்ட இணை செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட சங்கத்தின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக்கட்டும் சூழ்ச்சியாகவே இந்த திட்டத்தை பார்க்க வேண்டிய உள்ளது எனவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தால் தமிழ்நாட்டில் 88.57 லட்சம் பேர் பயனடைந்து வந்த நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு கூடுதலாக 4,354 கோடியை ஒதுக்க வேண்டும் என்ற சுமை ஏற்பட்டதால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் எனவும், ஏற்கனவே செய்த வேலைக்கான கூலியை மாதக்கணக்கில் வழங்காமல் மக்களை துன்புறுத்தும் மத்திய அரசு,100 நாள் வேலையை 125 நாட்களாக அதிகரித்து வழங்கப்படும் என்பதும், இனி வரும் காலங்களில் 15 நாட்களில் ஊதியம் வழங்கப்படும் என்பதும் மோசடி திட்டமாகவே இருக்கும் என்பதை சுட்டிக் காட்டவே இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். எனவே இத்திட்டத்தை கைவிட்டு இதற்காக நிறைவேற்றிய மசோதாவை மத்திய பிஜேபி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.