பௌத்திரம் பகுதியில் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி திட்டம் அமைப்பதற்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

பௌத்திரம் பகுதியில் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி திட்டம் அமைப்பதற்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-30 11:12 GMT
பௌத்திரம் பகுதியில் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி திட்டம் அமைப்பதற்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா பவித்திரம் கிராமப் பகுதியில் சதீஷ்குமார் என்ற நிறுவனத்தினர் அப்பகுதியில் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைப்பதற்காக பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அமுல்ராஜ் மற்றும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தலைமையில் அப்பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புதிதாக அமைய உள்ள கல்குவாரியால் அப்பகுதியில் வேலை வாய்ப்பு பெருகும் என்பதால் கிராமப்புற பொருளாதாரம் மேம்படையும் என்பதற்காக கல்குவாரியை திறக்க வேண்டும் என தெரிவித்தனர். அதேசமயம் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்ட அப்பகுதியில் ஏற்கனவே பல்வேறு குவாரிகள் செயல்பட்டு வருவதால் இந்த புதிய குவாரி தேவை இல்லை எனவும், ஏற்கனவே செயல்பட்டு வரும் குவாரிகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு தமிழகத்தில் அதிக வெப்பமான பகுதியாக கரூர் மாவட்டம் இதனால் மாறி வருவதை கருத்தில் கொண்டு இந்த குவாரியை நடத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கருத்துக்களை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இதனை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைத்து அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News