தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி, நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக, மாபெரும் உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்;

Update: 2025-12-30 11:57 GMT
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி, நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக, மாவட்ட தலைவர் மா.அரிகிருஷ்ணன் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம், இன்று ( 30.12.25 ) நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.வெற்றிச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ஆர்.பி.வேல்கண்ணன் விளக்கவுரை ஆற்றினார். மாநில மகளிர் துணைக் குழு அமைப்பாளர் ஜே.ஜமுருத் நிஷா துவக்க உரையாற்றினார். கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் த.ஸ்ரீதர், மாவட்ட தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாவட்ட இணைச்செயலாளர் பாலாம்பிகா சத்துணவு ஊழியர் சங்க மாநில பொருளாளர் வே.சித்ரா, மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.மூர்த்தி, ஏடி ஜேடி பாலிடெக்னிக் ஊழியர் சங்க தலைவர் எம்.சுந்தரம், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் மாநிலச் செயலாளர் கே எஸ் செந்தில் நிறைவுறையாற்றினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதோடு திட்டத்திற்கான நிதியினை வெகுவாக குறைத்திட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன 200க்கும் மேற்பட்ட வளர்ச்சித்துறை அலுவலர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் நா.மீனாட்சி நன்றி உரையாற்றினார்

Similar News