வீரசிகாமணி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது

வீரசிகாமணி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது;

Update: 2025-12-30 13:25 GMT
வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1995 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1995 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ,மாணவிகள் குடும்பத்துடன் கலந்துகொண்டு பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். வாழ்க்கையில் உயர்வுக்கு காரணமான ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். படித்த பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கி பகிர்ந்தனர். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியை பியூலா சாந்தினி,உதவித் தலைமை ஆசிரியர் முருகேசன், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியை மாரியம்மாள், உதவி தலைமை ஆசிரியர் அருணாசலம்.,பணி நிறைவு தமிழ் ஆசிரியர் திருமலைச்சாமி, ஆசிரியர் சித்ரா கண்ணன், சங்கரன்கோவில் வட்டார வளமைய பயிற்றுநர் காந்தி, வீரசிகாமணி ஊராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர் சீனி சுப்பிரமணியன் ஆகியோரை மாணவ மாணவிகள் மற்றும் குடும்பத்தினர்கள் கௌரவப்படுத்தினார்கள். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது படித்த பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாகவும்,நம் வாழ்க்கையின் உயர்வுக்கு காரணமான ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதாக அமைந்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. முப்பது ஆண்டுகளுக்கு பின்பு நண்பர்களை சந்திக்கும் நிகழ்வு எங்களது ஆயுளையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும் விதமாக உள்ளது.இதேபோல் ஒவ்வொரு மாணவர்களும் சந்தித்து நான் படித்த பள்ளிக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என நெகிழ்ச்சியுடன் கூறினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் வைத்திலிங்கம் செய்திருந்தார்

Similar News