ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் நடைபெற்றது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பெயரை மாற்றியதுடன் திட்டத்திற்கான நிதி வெகுவாக குறைத்த மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், புதிய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் பெற்றது;

Update: 2025-12-30 14:16 GMT
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பெயரை மாற்றியதுடன் திட்டத்திற்கான நிதி வெகுவாக குறைத்த மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், புதிய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடந்தது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத்தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் காசிநாத துரை, பொருளாளர் அருண் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சோமசுந்தர் தொடங்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜயராமலிங்கம், மாவட்ட செயலர் அப்துல் நஜ்முதீன், ஓய்வூதியர் கூட்டமைப்பு தலைவர் முருகேசன், நிர்வாகி விஜயராகவன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சிவனு உள்பட பலர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

Similar News