சீர்காழி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம், கூச்சல் குழப்பம். மன்ற பொருள் நகலை கிழித்தெறிந்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர்.

சீர்காழி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம், கூச்சல் குழப்பம். மன்ற பொருள் நகலை கிழித்தெறிந்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர்.;

Update: 2025-12-30 14:32 GMT
சீர்காழி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம், கூச்சல் குழப்பம். மன்ற பொருள் நகலை கிழித்தெறிந்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர். தனக்கு கூட்ட அழைப்பு நகல் வரவில்லை என தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பாமக உறுப்பினர். தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் அரசின் திட்ட டெண்டர் தீர்மானத்திற்கு திமுக உறுப்பினர் ஆதரவாகவும் ,எதிர்ப்பாகவும் பேசுவதாக அதிமுக உறுப்பினர் குற்றச்சாட்டு. சீர்காழி நகராட்சி கூடத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. தலைவர் துர்கா ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாமக உறுப்பினர் வேல்முருகன் கூட்டத்திற்கு தனக்கு மன்ற பொருள் அடங்கிய அழைப்பாணை அனுப்பப்படவில்லை என குற்றம் சாட்டி நகர் மன்ற தலைவர் மேஜையில் முன்பு தரையில் அமர்ந்து பாமக கொடியுடன் பாமக உறுப்பினரை புறக்கணிக்கிறதா சீர்காழி நகராட்சி என தர்ணா ஈடுப்பட்டார். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. அப்போது தேமுதிகவை சேர்ந்த உறுப்பினர் ராஜசேகர் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான டெண்டர் விடப்படுவதற்கான மன்ற பொருள் குறித்து கடந்த கூட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என உறுப்பினர்கள் கூறி தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததாகவும் பின்னர் ஏன் மறு ஒப்பந்தம் வைக்கவில்லை என தரையில் அமர்ந்து வாக்குவாதம் செய்தார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேஷ், பாலமுருகன், ரமாமணி மற்றும் மேலும் சில உறுப்பினர்கள் கடந்த கூட்டத்தின் போது சம்பந்தப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படவில்லை ஒத்திதான் வைக்கப்பட்டது என கூறினர். இதனால் நகர் மன்ற உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது நகர் மன்ற உறுப்பினர் ராஜேஷ் மன்ற பொருள் நகலை கிழித்தெறிந்து ஆவேசமாக நகர்மன்ற தலைவர் மேஜை முன்பு சென்று பேசினார்.அப்போது நகர்மன்ற உறுப்பினர்கள் இடையே கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் மன்றத்தை விட்டு நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் வெளியேறி சென்றனர். அரசின் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் குறித்த தீர்மானத்திற்கு திமுகவை சேர்ந்த சில உறுப்பினர்கள் ஆதரவாகவும், எதிர்பாகவும் பேசி வருகின்றனர் என அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கூட்ட அரங்கிலே குற்றம் சாட்டி பேசினார். இதனால் சீர்காழி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

Similar News