ஆரணியில் ஓட்டுநர் இல்லாத சரக்கு லாரி முன்னோக்கி நகர்ந்ததால் தடுத்து நிறுத்திய தொழிலாளி காயமடைந்து பலி.
ஆரணியில் முன்னோக்கி நகர்ந்த லாரியை தடுத்து நிறுத்தியதால் சிக்கி இறந்த தொழிலாளரி சிவலிங்கம்.;
ஆரணியில் அட்டைப்பெட்டி குடோனில் காலை ஓட்டுநர் இல்லாத லாரி திடீரென முன்னோக்கி நகர்ந்ததால் அங்கு பணி புரிந்த தொழிலாளி ஓடிச்சென்று தடுத்து நிறுத்த முயற்சி செய்தபோது மற்றொரு லாரி மீது மோதி நசுங்கி காயமடைந்து இறந்தார். இது குறித்து ஆரணி நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆரணி அடுத்த தச்சூர் மோட்டுகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம்(65) என்பவர் ஆரணி தச்சூர் சாலையில் உள்ள அட்டைப்பெட்டி தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை குடோனுக்கு 2 லாரிகளில் வந்த அட்டைப்பெட்டிகளை இறக்கி கொண்டு இருந்த போது அதில் ஒரு லாரியை டிரைவர் ஸ்டார்ட் செய்து விட்டு கீழே இறங்கியுள்ளார். அப்போது லாரி முன்னோக்கி நகர்ந்து சென்றது. அப்போது அங்கு பணிபுரிந்த கூலி தொழிலாளிகள் சிவலிங்கம் அந்த லாரியை கையால் நிறுத்த முயற்சி செய்தனர். அதற்குள் வேகமாக லாரி முன்னோக்கி சென்றதால் ஏற்கெனவே அங்கு நிறுத்தப்பட்டிருந்து மற்றொரு லாரி மீது மோதியது. இதில் நடுவில் சிக்கிய தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதனால் சிவலிங்கத்தை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனற். இதனால் இந்த விபத்து குறித்து சிவலிங்கம் மனைவி விஜயா ஆரணி நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி நகர எஸ்.ஐ ஆனந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிவலிங்கத்திற்கு ஆனந்தி, ஜெயலட்சுமி ,தனலட்சுமி என்ற 3 மகள்கள் உள்ளனர்.