ஆரணி வரதராஜா பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு. .

ஆரணி பெரியகடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ கில்லா வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி உற்சவர் தாயாருடன் பெருமாளை அலங்கரித்து ராஜகோபுரத்தின் வழியாக சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2025-12-30 17:44 GMT
ஆரணி பெரியகடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ கில்லா வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி உற்சவர் தாயாருடன் பெருமாளை அலங்கரித்து ராஜகோபுரத்தின் வழியாக சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது கோபுரத்தின் முன்பாக நின்று இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, வரதராஜா, நாராயணா என பக்தி கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர் .தொடர்ந்து திருப்பாவை நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் உற்சவர் சாமியை கோவில் மாடவீதி வழியாக திருவீதி உலாவும் நடைபெற்றது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர் அன்னப்பிரசாதமும் வழங்கப்பட்டது. இதே போல ஆரணி கொசப்பாளையம் தச்சூர் சாலையில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோவிலும் வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடந்தது. மேலும் ஆரணி சத்தியமூர்த்தி சாலையில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோவிலிலும் சொர்க்கவாசல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது. மேலும் ஆரணி இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீதேவி , பூதேவி தாயாருடன் பெருமாளை அலங்கரித்து சொர்க்கவாசல் வழியாக கொண்டு சென்றனர். . கருவறை சுவாமிக்கு முத்தாங்கி அலங்காரம் செய்திருந்தனர் . திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் . மேலும் ஆரணி அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சயன கோலத்தில் ரங்கநாதரை போல அலங்கரித்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கப்பட்டது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல ராட்டினமங்கலம் பகுதியில் உள்ள ராதா மாத பெருமாள் கோவிலிலும் , சேவூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. ஆரணி அடுத்த அரியப்பாடி லட்சுமிநரசிம்மன் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றதி்ல் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Similar News