குளித்தலையில் லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகை தின விழா

குளித்தலை சங்கத் தலைவர் வழக்கறிஞர் ரபீக்தீன் தலைமை;

Update: 2025-12-31 00:12 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகை தின விழா நேற்று மாலை குளித்தலை கிராமியம் அரங்கில் சங்கத் தலைவர் வழக்கறிஞர் ரபீக்தீன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட ஆளுநர் PMJF Lion மணிவண்ணன் கலந்து கொண்டு லயன்ஸ் சங்கப் பொறுப்பாளர்களை பாராட்டி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாக அலுவலர் PMJF Lion இராஜன், GAV மாவட்டத் தலைவர் MJF Lion ராஜேந்திரன், மண்டலத் தலைவர் MJF Lion ஜாகீர் உசேன், வட்டாரத் தலைவர் MJF Lion சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குளித்தலை லயன்ஸ் சங்கத் தலைவர் Lion ரபீக்தீன், செயலாளர்கள் தாமோதரன், கோவிந்தராஜ், பொருளாளர் மோகன் மற்றும் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Similar News