பஞ்சப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விவசாய சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்;
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பஞ்சப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பஞ்சப்பட்டி பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக் கூறி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கிளைச் செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த பிச்சை, வீரபாண்டியன், கலியபெருமாள், ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சக்திவேல், பொருளாளர் சுப்பிரமணியன், சிபிஐஎம் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், ஒன்றிய செயலாளர் நாகராஜன், விவசாய சங்க ஒன்றிய குழு தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன சிறப்பு உரையாற்றினார். பஞ்சப்பட்டி பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி சட்டம் ஒழுங்கு பாதுகாத்திட புறக்காவல் நிலையம் அமைத்திட வேண்டும், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும், பஞ்சப்பட்டி கடைவீதி 4 ரோட்டில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பொது சுகாதார கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும் பஞ்சப்பட்டி, தாதம்பட்டி பொது மயானத்திற்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரி கண்டன கோஷங்களையும் முழக்கமிட்டனர். இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்