பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் எம்.லக்ஷ்மி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் .மிருணாளினி முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-31 09:25 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் எம்.லக்ஷ்மி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் .மிருணாளினி முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் எம்.லக்ஷ்மி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, முன்னிலையில் (30.12.2025) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வேளாண்மைத் துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை இயந்திரப் பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, கூட்டுறவு துறை, மாவட்ட வழங்கல் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி, வருவாய் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கல்வித் துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பணிமுன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக கூட்டுறவு நுகர்பொருள் வழங்கல் துறை சார்பில், தாயுமாணவன் திட்டத்தின் மூலம் முதியவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் முறையாகவும், தரமாகவும் வழங்கப்படுகிறதா என்றும் இத்திட்டத்தின் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் எத்தனை பயனாளிகள் பயனடைகின்றனர் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்தை கண்காணிப்பு அலுவலர் அவர்கள், பொருட்கள் வழங்கப்படும் போது மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார். பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையின் மூலம் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளது, பெறப்பட்டுள்ள மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எத்தனை மனுக்கள் நிலுவையில் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்த பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நிலுவையில் இருப்பதற்கு காரணம் என்ன என சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, மிக விரைந்து மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார். பெரம்பலூர் நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றிட வேண்டும் என்றும் அனைத்து பொதுமக்களுக்கும் சீரான குடிநீர் வழங்கப்பட வேண்டும் எனவும், நகராட்சியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட அனைத்து இடங்களிலும் சரியான முறையில் தார் சாலைகள் முறையாக அமைக்கப்படுகிறதா என ஆய்வு செய்து பொதுமக்கள் சிரமத்தை குறைக்க விரைவாக அப்பணியை முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். நெடுஞ்சாலைத் துறை சார்பில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகள் விரைவாகவும், தரமாகவும், குறித்த காலத்திற்குள் முடித்துத்தர சம்பந்தப்பட்ட அலுவலரிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன்,கோட்டாட்சியர் அனிதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.பாண்டியன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்கொழுந்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),(பொ) சொர்ண ராஜ், உள்ளிட்ட அனைத்து துறைகளின் முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News