கடையநல்லூரில் ஓம் சக்தி பக்தர்கள் சார்பில் அன்னதானம்
கடையநல்லூரில் ஓம் சக்தி பக்தர்கள் சார்பில் அன்னதானம்;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கடையநல்லூர் நகரம் கிருஷ்ணாபுரத்தில் மேல்மருவத்தூர் செல்லும் ஓம் சக்தி பக்தர்களுக்கு உதயநிதி நற்பணி மன்றத்தை சார்ந்த கண்ணன் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட திமுக துணைச் செயலாளர் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கனிமொழி கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார் முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாவட்ட கவுன்சிலர் கனிமொழிக்கு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் சக்தி வழிபாட்டு குழுவினர் பிரசாதம் வழங்கி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது நிகழ்வில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்