அடிப்படை வசதிகள் ஏற்படுத்த தவறும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மருதாலம் அருந்ததி பாளையம், நவம்பரம் பகுதி சுடுகாடு அளவீடு செய்து பராமரித்து எரிமேடை அமைக்க வேண்டும். குடிநீர், மின்விளக்கு முறையாக பராமரிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பாகுபாடு காட்டுவதை கைவிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றியதை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட10;

Update: 2025-12-31 15:07 GMT
அடிப்படை வசதிகள் ஏற்படுத்த தவறும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ராணிப்பேட்டை, டிச. 31 - மருதாலம் அருந்ததி பாளையம், நவம்பரம் பகுதி சுடுகாடு அளவீடு செய்து பராமரித்து எரிமேடை அமைக்க வேண்டும். குடிநீர், மின்விளக்கு முறையாக பராமரிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பாகுபாடு காட்டுவதை கைவிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றியதை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் புதனன்று (டிச. 31) மாவட்ட குழு உறுப்பினர் வ. வேலு தலைமையில் மருதாலம் கூட்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விச மாவட்ட தலைவர் எஸ். கிட்டு, விதொச மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, பொருளாளர் எஸ். வெங்கடேசன், ரேணு, தாலுகா செயலாளர் பி. சேகர், ஆ. ராமமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் லோகநாதன், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இறுதியாக மாவட்ட குழு உறுப்பினர் டி. தரணி நன்றி கூறி முடித்து வைத்தார்.

Similar News