வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் குல்தீப் நாராயண், தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் (Special Roll Observer) குல்தீப் நாராயண், தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-31 15:22 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் குல்திப் நாராயண், தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 (Special Intensive Revision of Electoral Rolls) பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் குல்திப் நாராயண், இ.ஆ.ப., 1200 வாக்காளர்களுக்கு மேலுள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல், புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்குதல், வாக்குச்சாவடி அமைவிட மாற்றம், முகவரியில் இல்லாத வாக்காளர்கள், மாவட்ட மற்றும் தொகுதி அளவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு நடத்தப்பட்ட கூட்டம், தற்போது பெறப்பட்ட படிவம்-6, 7 மற்றும் 8, வாக்காளர் பட்டியலுடன் ஆதார், தொலைபேசி எண் இணைத்தல் உள்ளிட்ட இனங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். மேலும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டபோது வாக்குச்சாவடி நிலை முகவர்கள்-2 (BLA-2) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அனைத்து கட்சியினரும் விடுதலின்றி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும், முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் கொண்ட வாக்காளர்கள் (ASDD) தொடர்பான ஆட்சேபனைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள்-2-ஆக நியமிக்கப்பட்டவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் அதனை தெரிவிக்குமாறும், மேலும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் தொடர்பாக படிவம்-6 புதிய வாக்காளரிடம் பெற்று வழங்கவேண்டுமென வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் குல்திப் நாராயண், தெரிவித்தார். தொடர்ந்து, 94-நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமக்கல் மாநகராட்சி கொண்டிசெட்டிபட்டி, பெரியூர் மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் கொண்ட வாக்காளர்கள் மற்றும் 2002-ல் வாக்காளர் பட்டியலுடன் தொடர்பு படுத்த இயலாத நோட்டீஸ் வரப்பெற்ற வாக்காளர்கள் தொடர்பான (ASDD) விவரம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வாக்காளர் பட்டியலில் தகுதியான அனைத்து நபர்களும் சேர்க்கப்படுதல், தவறுகள் நீக்கப்படுதல் மற்றும் பொதுமக்களின் மனுக்கள் சரியான முறையில் பரிசீலிக்கப்படுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இக்கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வ.சந்தியா, வாக்காளர் பதிவு அலுவலர்களான மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், தனித் துணை ஆட்சியர் சு.சுந்தரராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் வே.சாந்தி (நாமக்கல்), பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார், தனி வட்டாட்சியர்கள் (தேர்தல்) செல்வராஜ், ராஜேஷ் மற்றும் அனைத்து நகராட்சி ஆணையர்கள், வட்டாட்சியர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News