வாக்காளர் பட்டியல் திருத்த வழிகாட்டி முகாம்

வாக்காளர் பட்டியல் திருத்த வழிகாட்டி முகாம்;

Update: 2025-12-31 16:18 GMT
அச்சன்புதூரில் மமக சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், விடுபட்ட வாக்காளர்களுக்கு ஆலோசனைகள் வழங்குதல், SIR நோட்டீஸ் எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது அச்சன்புதூர் பேரூராட்சி பாகம் எண் 146 மணக்காட்டு பகுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களுக்கு புதிதாக விண்ணப்பம், திருத்தங்கள் உள்ளிட்டவைகளுக்கு வழிகாட்டுதல், SIR வாக்காளர் பட்டியலில் Not Mapping (படிவம் சரியாக நிரப்பாதவர்களுக்கு) நோட்டீஸ் வருவதை எதிர்கொள்ளல் அதற்குண்டான வழிமுறைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில், ஏராளமான வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சரிபார்த்து, பாகம் வரிசை எண் குறித்து கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒவ்வொரு பாகம் வாரியாக இம்முகாம் நடைபெறும்.

Similar News