ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு தாராபுரம் காவல் துறையினர் சிறப்பு கொண்டாட்டம்
2026 புத்தாண்டை முன்னிட்டு தாராபுரம் காவல் துறையினர் சிறப்பு கொண்டாட்டம் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி சாலை பாதுகாப்பு உறுதிமொழி;
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் துறையினர் சார்பில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி உடுமலை ரவுண்டானா சிக்னலில் நடைபெற்றது. இதில் காவல் துறையினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சாலை விதிகளை மதிப்போம், அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணிப்போம், மது அருந்தி வாகனம் ஓட்ட மாட்டோம் உள்ளிட்ட பல்வேறு சமூக விழிப்புணர்வு உறுதிமொழிகளை காவல் துறையினரும் பொதுமக்களும் ஒன்றாக எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டு, புத்தாண்டை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை வெளிப்படுத்தினர். மேலும், தாராபுரம் காவல் துறையினர் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பாதுகாப்பாக அமைய வேண்டும், சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்துக்களை பொதுமக்களுக்கு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் விஜயசாரதி, துணை ஆய்வாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கினர்.