கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்;
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஒன்றியம் கழுகூர் கிராமத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பிரதோஷம் வழிபாடு இன்று இரவு நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனர். கோவில் முன்பு உள்ள நந்தீஸ்வரருக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் மற்றும் தீபாரதனை செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.