பிரதோஷத்தில் புத்தாண்டு பிறப்பு நாமக்கல் சுற்று வட்டார சிவன் கோவிலில் திரளான பக்தர்கள் வழிபாடு!

புத்தாண்டு தினத்தன்று பிரதோஷம் வருவது சிறப்பு ஆகும். இதனால் நாமக்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.;

Update: 2026-01-01 15:25 GMT
மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது விசேஷமானது.புத்தாண்டு தினத்தன்று பிரதோஷம் வருவது சிறப்பு ஆகும். இதனால் நாமக்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். மார்கழி பிரதோஷத்தையொட்டி, நாமக்கல்லில் உள்ள சிவன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு செய்தனா்.இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.நந்தீஸ்வரருக்கு பால், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் பல்வேறு மலர்களால் மாலைகள் அணிவித்தும் தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாயா என முழக்கமிட்டபடி பக்தா்கள், நந்தியையும், சிவனையும் வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு விபூதி, சந்தனம் மற்றும் பூக்கள் வழங்கப்பட்டது. *நாமக்கல்- தட்டார தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்."சேந்தமங்கலம் முத்துக்காப்பட்டி காசிவிசுவநாதா் கோயில், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரா் கோயில், மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில், உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Similar News