நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை! திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்!
சுமார் 300 கிலோ எடை கொண்ட மாலைகள் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக பால், தயிர், இளநீர், மஞ்சள்சந்தனம், பழச்சாறு, பன்னீர் உள்பட 17 பொருட்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் சுமார் 300 கிலோ எடை கொண்ட மாலைகள் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து அம்மன் சிவன் - பார்வதி மற்றும் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அலங்காரத்தை திருக்கோயில் பூசாரி குழுவினர். செய்திருந்தனர்