ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அக்கியம்பட்டி ராகவேந்திரர் பிருந்தாவன ஆலயத்தில் ஸ்ரீ மகா சுதர்சன யாக வேள்வி பெருவிழா !

தொழில் வளம் சிறக்கவும், கல்வி மேம்படவும், இல்லறம் சிறக்கவும் ஸ்ரீ மகா சுதர்சன வேள்வியில் பல்வேறு விதமான மந்திரங்கள் முழங்கி வழிபாடு செய்யப்பட்டது;

Update: 2026-01-01 16:31 GMT
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ குரு ராகவேந்திர பிருந்தாவன ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ மகா சுதர்சன யாக வேள்வி பெருவிழா நடைபெற்றது. முன்னதாக மூலவர் ஸ்ரீ குரு ராகவேந்திரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களான ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ மகாலட்சுமி ,ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர், ராமானுஜர் ஆகியோருக்கு பல்வேறு விதமான அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன .பின்பு மூலவர் ஸ்ரீ குரு ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக நடைபெற்ற வேள்வி பெருவிழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொழில் வளம் சிறக்கவும், கல்வி மேம்படவும் ,இல்லறம் சிறக்கவும் இந்த வேள்வியில் பல்வேறு விதமான மந்திரங்கள் முழங்கி வழிபாடு செய்யப்பட்டது . ஏராளமானோர் தம்பதி சமேதராக கலந்து கொண்டனர் . காலை 9 மணி அளவில் ஆரம்பித்த வேள்வியானது மதியம் ஒரு மணி அளவில் நிறைவு பெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News