சிவாயம் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம்
கோவில் வளாகத்தில் உழவாரப்பணி தீவிரம்;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீ சிவகாமி அம்பிகா உடனுறை ஸ்ரீ நடராஜ பெருமான் ஆருத்ர தரிசன விழா நாளை காலை 6 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்று மாலை 4 மணிக்கு ஆனந்த தரிசனம் மற்றும் திருவீதி உலா நடைபெறுகிறது. அதை ஒட்டி இன்று கோவில் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் தூய்மைப்படுத்தும் உழவாரப்பணி சிவ பக்தர் திருமுருகன் தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது.