தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு காலண்டர்! நாமக்கல் கிழக்கு நகர செயலாளர் விஜய்மணி வழங்கினார்!
தவெக கட்சி நிர்வாகிகள்,பொதுமக்களுக்கு அன்னதானம், காலண்டர், இனிப்பு என 500க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு நாமக்கல் கிழக்கு நகர செயலாளர் விஜய்மணி மற்றும் தவெக நிர்வாகிகள் வழங்கினார்கள்!;
நாமக்கல் கிழக்கு நகரம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நாமக்கல் கிழக்கு நகரச்செயலாளர் விஜய்மணி தலைமையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு அன்னதானம், காலண்டர், இனிப்பு என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் சதீஷ், மாவட்டத் துணைச் செயலாளர் தில்லை மோகன்,நகர இணை செயலாளர் கௌதம்,நகர பொருளாளர் மணி(எ) பிரபாகரன்,துணைச் செயலாளர்கள் நபில்,இளங்கோவன் மற்றும் நாமக்கல் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.