கள்ளக்குறிச்சி: மாநில அளவிலான கால்பந்து போட்டி...

மெரைன் ஃபோர்ஸ் கால்பந்து கழகம் சார்பில் 18,வது கால்பந்து போட்டி கள்ளக்குறிச்சியில் மூன்று நாட்கள் நடக்கிறது, அதில் தொடக்க விழா இன்று நடைபெற்றது, இதில் விழுப்புரம்,காஞ்சிபுரம் மற்றும் தமிழக முழுவதும் உள்ள கால்பந்து வீரர்கள் இப் போட்டியில் பங்கேற்பு.;

Update: 2026-01-02 08:51 GMT
கள்ளக்குறிச்சியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி மெரைன் ஃபோர்ஸ் கால்பந்து கழகம் 18,ம்ஆண்டு, விழாவை முன்னிட்டு கால் பந்து போட்டி நடைபெற்றது. ஜனவரி, 2,3,4 நாள் போட்டியாக நடைபெறும் இப்போட்டி ஜனவரி, 2 அதன் ஒருங்கிணைப்பாளர் சுந்தர பாண்டியன் என்கின்ற குட்டி TSYF நிர்வாகிகள் ஆதி தமிழ்ச்செல்வன்,ஏழுமலை, டெண்டுல்கர் ஆகியோர் கால்பந்து வீரர்களுக்கு வெல்கம் ஷேக் கொடுத்து வரவேற்றார்கள், இதில் மெரைன் ஃபோர்ஸ் கால்பந்து கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர், இதில் விழுப்புரம்,காஞ்சிபுரம்,சென்னை திருச்சி, போன்ற தமிழக முழுவதும் உள்ள கால்பந்து வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள். விழா முடிவில் வெற்றி பெறும் அணிக்கு எம் எல் ஏ வசந்தம்.கார்த்திக்கேயன் அவர்கள் பரிசு வழங்கி கௌரவிப்பார்.

Similar News