திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரியில் ஆய்வு செய்ய வருகை புரிந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் முன்னிலையில் முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் சங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, ஒன்றிய செயலாளர் மனோகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.