எம்.பி கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் நடைபெட்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி.
நாமக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் நாமக்கல் கே.மோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற,;
கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், நாமக்கல் திருச்சி ரோடு - சாந்தி முதியோர் இல்லத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் நாமக்கல் கே.மோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப.ராணி தலைமையில் பங்கேற்று உதவிகளை வழங்கினார் முதியோர் இல்லத்திற்கு தேவையான போர்வை மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகியவைகளை வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட முன்னாள் தலைவர் சேக் நவீத், மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், கிழக்கு மாநகர துணை செயலாளருமான .டி.டி.சரவணன், முன்னாள் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் M.P.சத்தியபாபு, நாமக்கல் கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப்பிரிவு துணை அமைப்பாளர் A.கிரிஸ்டோபர் மார்ட்டீன், முன்னாள் கவுன்சிலர் அண்ணா நகர் சம்பத், முன்னாள் நகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பரமு (எ) அங்காள பரமேஸ்வரி,26வது வார்டு துணை செயலாளர் சுரேஷ், முன்னாள் நகர சிறுபான்மை நல உரிமைப்பிரிவு துணை அமைப்பாளர் ISM.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.