ஆருத்திரா தரிசனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆருத்திரா தரிசனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு;

Update: 2026-01-03 04:58 GMT
ஆருத்திரா தரிசனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு . தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லாசிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன. சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப்பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப்பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.சேந்தனாருக்கும், திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

Similar News