திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் கிராமத்தில் இன்று மக்களை தேடி மருத்துவம் மூலம் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி முக்கூடல் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அஷ்ரப் அலி உத்தரவின்பேரில் நடைபெற்றது. இதில் மருத்துவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.