தோல் நோய் மருத்துவ முகாம்

பட்டியலின மக்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தோல் நோய் மருத்துவ முகாம் .;

Update: 2026-01-03 07:33 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பாக புதுக்கோட்டையில் 02-01-2026 அன்று பட்டியலின மக்களுக்கு எதிரான தொடர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலவச தோல் நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது. தொடக்க நிகழ்விற்கு புதுக்கோட்டை, அம்பேத்கர் பெரியார் காரல் மார்க்ஸ் பண்பாட்டு இயக்க நிறுவனர் டாக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னோடி தோழர் மணவாளன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர் கலைஞர்கள் சங்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் தோழர் கஸ்தூரி ரங்கன் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் தோழர் தமிழ்செல்வன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தார்கள். திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவரும், தோல்நோய் மற்றும் அழகுக்கலை மருத்துவருமான டாக்டர் தெட்சிணாமூர்த்தி மருத்துவ பயனாளிகளுக்கு தோல் நோய் சிகிச்சை அளித்தார். 110 பயனாளிகள் கலந்து கொண்டனர். தொடக்க நிகழ்விற்கு வரவேற்புரை கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன், நன்றியுரை தோழர் கவின் பாரதி நிகழ்த்தினர். திரு.பிரபாகரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

Similar News