தென்காசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
தென்காசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்;
தென்காசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தென்காசி அருகே உள்ள மேலகரம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ச.ராஜசேகரன், மாவட்ட மாநில பொருளாளர் நா.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகள், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் உடன் நடைபெற்ற சந்திப்பு விவரம், வரும் ஜனவரி 6-ம் தேதி நடத்தும் காலம் வரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, சென்னை ஊரக வளர்ச்சி இயக்கத்தில் 30.01.2026 அன்று பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் கலந்து கொள்வது, சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, டெல்லி தர்ணா போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்கள் ஜே.பாஸ்கர்பாபு, மு.செல்வ குமார்,ந. ஜெய்சங்கர், பொ. சார்லஸ் சசிகுமார், எஸ். வெங்கிடாசலம், க.குமார், கா. லியாகத் அலி ஆர்.ராமநாதன், மாநில செயலாளர்கள் பா.ஜெகஜீவன்ராம், கி.சங்கர் ஆர்.பாலமுருகன், எஸ்.வினோத் குமார்,ஆர். விஜய குமார்,ஜி.விஜய குமார், பி செந்தில்குமார் தா சந்தோஷ் குமார் மாநில தணிக்கையாளர்கள் எஸ். சென்ராயன் எஸ் ஜாகிர் உசேன் ஆகியோர், சங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தலைவர் இரா இராமநாதன் மாவட்ட பொருளாளர் மற்றும் மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம் மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் மாவட்டத் துணைத் தலைவர் பழனி மாவட்ட மகளிர் அணி துணைக் குழு அமைப்பாளர் ஜெயலட்சுமி, மாவட்ட இணை செயலாளர் முத்துக்குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜன் மாவட்டத் துணைத் தலைவர் சீனிவாசன் செல்வம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி முன்னாள் மாநில துணை தலைவர் வே சண்முகசுந்தரம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி. சுப்பிரமணியன் பொது சுகாதாரத்துறை மாநில தலைவர் கங்காதரன், தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ந.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.